ரூ.1,000 உரிமைத்தொகை வாங்க வங்கியில் குவிந்த பெண்களால் பரபரப்பு

ரூ.1,000 உரிமைத்தொகை வாங்க வங்கியில் குவிந்த பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-16 19:42 GMT

ரூ.1,000 உரிமைத்தொகை வாங்க வங்கியில் குவிந்த பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

வாக்குவாதம்

தகுதி உள்ள குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இருப்பினும் கடந்த 14-ந்தேதியே பலருக்கு பணம் வந்துவிட்டது. இந்தநிலையில் நேற்று திருச்சி பாலக்கரையில் உள்ள ஒரு வங்கியில் பணம் எடுக்க அப்பகுதி பெண்கள் சென்றனர்.

ஒரே நேரத்தில் ஏராளமானோர் திரண்டதால், வங்கியின் நுழைவு வாயிலை ஊழியர்கள் பூட்டினர். இதனால் பெண்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வங்கி கணக்கு புத்தகத்தை வாங்கி வைத்துக்கொண்டு அவர்களுக்கு ரூ.1,000 வந்துவிட்டதா? இல்லையா? என்று பார்த்து கூறினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிலருக்கு ஆதார் எண் அடிப்படையில் பயன்பாடு இல்லாத வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு விட்டதாகவும் கூறிச்சென்றனர்.

மண்ணச்சநல்லூர்

இதேபோல், மண்ணச்சநல்லூர் வட்டாரத்தில் உள்ள பெண்கள் ஏராளமானோர் அந்தந்த பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், வங்கிகள் திறப்பதற்கு முன்பு காலையிலிருந்தே குவிய தொடங்கினர். வழக்கமாக வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை விட அதிக அளவில் பெண்கள் வந்ததால் வங்கி பணியாளர்களுக்கு இது கூடுதல் பணியாக அமைந்தது. கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்படவில்லை என்பதை அறிந்த சில பெண்கள் ஏமாற்றத்துடனும், சிலர் எப்படியும் வந்துவிடும் என்ற நம்பிக்கையிலும் அங்கிருந்து பேசியபடியே கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்