மகளிர் காங்கிரசார் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்
உடன்குடி பஜாரில் மகளிர் காங்கிரசார் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உடன்குடி:
உடன்குடி பஜாரில் ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து மகளிர் காங்கிரசார் கைகளில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவி சிந்தியா தலைமை தாங்கினார். இதில் மகளிர் காங்கிரசார் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசை கண்டித்தும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.