ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய பெண்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-17 19:44 GMT

சேலம், 

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையமானது குடும்பம் மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தேவைப்படும் அவசரகால மீட்பு, மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல் உதவி, சட்ட உதவி, தற்காலிக தங்குமிடம் ஆகியவற்றை வழங்கி பாதுகாக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய கூடுதல் ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஒரு மைய நிர்வாகி பணியிடம், ஒரு இரவுக்காவலர் பணியிடம், 2 பல்நோக்கு உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். 24 மணி நேரமும் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்படுவர். உள்ளூரை சேர்ந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியான நபர்கள் தங்களது சுய விவரங்களை வருகிற 26-ந் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் வளாகம், அறை எண்-126 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்