பெண்ணின் 2-வது கள்ளக்காதலன் கைது

வாலிபரை கொன்று உடல் கல்குவாரியில் வீசிய சம்பவத்தில் பெண்ணின் 2-வது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-15 19:03 GMT

மூங்கில்துறைப்பட்டு, 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த வடபொன்பரப்பி அருகே உள்ள மணலூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 21) டிரைவர். இந்த நிலையில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக அதேஊரை சேர்ந்த அய்யனார் மனைவி விஜயபிரியா(29) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கதுரையை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து, உடலை சாக்கு மூட்டையில் கட்டி கல்குவாரி குட்டை நீரில் வீசிச் சென்று விட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜயபிரியாவை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தங்கதுரையை கொலை செய்ய விஜயபிரியாவை அவரது 2-வது கள்ளக்காதலனான வடகீரனூரை சேர்ந்த ரஜாக் (40) என்பவர் தூண்டியுள்ளார். அதன்படியே தங்கதுரையை விஜயபிரியா கொலை செய்தது தெரிந்தது. மேலும் கொலையை மறைக்கவும் ரஜாக் உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து ரஜாக்கை நேற்று போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்