மதுபாட்டில் விற்ற பெண் கைது

மதுபாட்டில் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-27 19:03 GMT

நெல்லை அருகே சீவலப்பேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சீவலப்பேரியில் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டு இருந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சீவலப்பேரி வடக்குத்தெருவை சேர்ந்த சங்கர் மனைவி மகாராசி (வயது 40) என்பதும். சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்றுக்கொண்டு இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாராசியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்