வேதாரண்யத்தை அடுத்த செம்போடை மேலக்காடு பகுதியை சோ்ந்தவர் சங்கர். இவரது மனைவி சத்யா (வயது31). இவர்களுக்கு 10 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சத்யா அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்றுமுன்தினம் வயிற்றுவலி அதிகமானதால் மனமுடைந்த சத்யா மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்தார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.