பெண் மீது தாக்குதல்
கூத்தாநல்லூர் அருகே பெண் மீது தாக்குதல் நடத்தி வாலிபர் கைது செய்யப்பட்டார்
கூத்தாநல்லூர், டிச. 8-
கூத்தாநல்லூர் அருகே உள்ள சித்திரையூர், குடியான தெருவை சேர்ந்தவர் பிரிதிவிராஜ். இவருடைய மனைவி விமலா (வயது 31). இவரிடம், இவரது தாய்மாமன் மகனான அதே பகுதியைச் சேர்ந்த நித்திஷ்குமார்(வயது 18) மதுபோதையில் தகராறு செய்து விமலாவை அரிவாள் மற்றும் உருட்டு கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், படுகாயம் அடைந்த விமலா திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து விமலா வடபாதிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து நித்திஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.