சேலம் அருகே கோவில் பெண் ஊழியருக்கு கத்திக்குத்து

சேலம் அருகே கோவில் பெண் ஊழியரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-07-08 22:24 GMT

சேலம் அருகே வீராணம் கொய்யாதோப்பு சத்யா நகரில் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நிர்மலா (வயது 64) என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று அல்லிக்குட்டை கணபதி நகரை சேர்ந்த குமார் (22) என்பவர் கோவிலுக்கு வந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு செல்லாமல் அங்கேயே இருந்துள்ளார். இதனால் அவரிடம் கோவிலில் இருந்து செல்லுமாறு ஊழியர் நிர்மலா அறிவுறுத்தியுள்ளார். இதனால் ஆவேசம் அடைந்த குமார் திடீரென அவர் வைத்திருந்த கத்தியால் நிர்மலாவை குத்தி, கொலை மிரட்டல் விடுத்து சென்றார். இதில் படுகாயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வீராணம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்