விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

பேரளம் அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-07-26 19:15 GMT

நன்னிலம்;

பேரளம் அருகே உள்ள வடுகக்குடி பகுதியை சேர்ந்தவர்அன்பழகன். இவருடைய மகள் சூர்யா(வயது20). இவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தாா். இதனால் மனமுடைந்த சூர்யா வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யா பரிதாபமாக இறந்தாள். இது குறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்