சொத்து தகராறில் பெண்ணுக்கு கத்திக்குத்து

நாச்சியார்கோவில் அருகே சொத்து தகராறில் பெண்ணுக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக அவரது மகன் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-19 21:07 GMT

திருவிடைமருதூர்;

கும்பகோணம் அருகே உள்ள வண்டுவாஞ்சேரி காமராஜர் காலனி தெருவை சேர்ந்தவர் ஆச்சியம்மாள்(வயது61). இவர் அப்பகுதியில் உள்ள தனது 2-வது மகன் ஜெய்சங்கர் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இவரது மூத்த மகன் மதியழகன்( 43) இன்னும் ஏன் சொத்தை பிரித்துக் கொடுக்காமல் இருக்கிறாய் என்று கேட்டு ஆச்சியம்மாளை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஆச்சியம்மாள் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளாா். இது குறித்த புகாரின் பேரில் நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதியழகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்