சாராயம் விற்ற பெண் கைது

கூத்தாநல்லூர் அருகே சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார் அவரிடம் இருந்து ௧௨௦ லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது

Update: 2023-06-14 18:45 GMT

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே உள்ள, வடபாதிமங்கலம் போலீசார், வடபாதிமங்கலம், மாயனூர், சோலாட்சி, உச்சுவாடி, பூசங்குடி பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது புனவாசல் பகுதியில் புதுச்சேரி சாராயம் விற்ற புனவாசல் பெரிய தெருவை சேர்ந்த ரஷ்யா (வயது 47) என்ற பெண் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்த 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்