சாராயம் விற்ற பெண் கைது
மணல்மேடு அருகே சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
மணல்மேடு:
மணல்மேடு அருகே மன்னிப்பள்ளம் மெயின் ரோடு பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மன்னிப்பள்ளம் மெயின் ரோட்டை சேர்ந்த தம்பிதுரை மனைவி பழனியம்மாள் (வயது52) என்பவர் அவர் வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்களநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனியம்மாளை கைதுசெய்தனர். மேலும் அவரிடம் இருந்து 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.