கும்மிடிப்பூண்டி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே திருமணமாகாத பெண் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-02-07 09:09 GMT

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ளது கீழ்முதலம்பேடு கிராமம். இங்கு வசித்து வந்தவர் எஸ்தர் ராணி (வயது38). இவருக்கு திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் வீட்டில் சமையல் செய்யும் போது எஸ்தர் ராணி, தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளித்ததாக கூறப்படுகிறது. இதில் கவலைக்கிடமான நிலையில், சென்னை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி பஜாரையொட்டிய சந்து தெருவில் வசித்து வந்தவர் முனுசாமி என்கிற அருள் (32). இவருக்கு திருமணமாகவில்லை. முனுசாமி தனக்கு 32 வயது ஆகிய நிலையில், திருமணம் ஏதும் நடக்கவில்லையே என மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த மாதம் 17-ந் தேதி வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்தார். அவரது வீட்டார் உடனடியாக அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி முனுசாமி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்