சிறுமி இறந்த வழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற பெண் விடுதலை

சிறுமி இறந்த வழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற பெண்ணை விடுதலை செய்து ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

Update: 2022-07-10 19:48 GMT

தேனி மாவட்டம் தேவாரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டியம்மாள். நகைக்காக சிறுமியை கொலை செய்ததாக கடந்த 2007-ம் ஆண்டு கைதானார். பின்னர் அவருக்கு ஆயுள்தண்டனை விதித்து கடந்த 2010-ம் ஆண்டு கோர்ட்டு தீர்ப்பளித்தது. ஆனால் இந்த தண்டனையை எதிர்த்து அவர், மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாரஷ், ஹேமலதா ஆகியோர் விசாரித்தனர்.

முடிவில், இந்த வழக்கின் சாட்சிகளின் வாக்குமூலங்கள் நம்பகத்தன்மை அற்றதாக உள்ளன. கொலையுண்ட குழந்தை, காணாமல் போன நாளன்று மனுதாரர் சுந்தரபாண்டியம்மாளுடன் பார்த்ததாக சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த குழந்தை காணாமல் போன அன்று கிராமத்தினர் அதுபற்றி தெரிவிக்கவில்லை.

அரசு தரப்பு குற்றச்சாட்டுகள் கோர்ட்டின் நம்பகத்தன்மையை பெறும்படியாக இல்லை. எனவே சுந்தரபாண்டியம்மாள் விடுதலை செய்யப்படுகிறார் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்