பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிக்கப்பட்டது.

Update: 2023-08-16 17:31 GMT

பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டி, திடீர்குப்பத்தைச் சேர்ந்தவர் சிவபாலன். இவரது மனைவி தேவி (வயது 39). இந்த நிலையில் நேற்று மாலை பெரம்பலூரில் இருந்து களரம்பட்டிக்கு சிவபாலனும், தேவியும் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர். பெரம்பலூர்- துறையூர் சாலையில் ஈச்சம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே சென்றபோது, அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் தேவி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து தேவி பெரம்பலூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்