பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு

பணகுடி அருகே பெண்ணிடம் 5 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் பறித்து சென்றனர்.

Update: 2022-07-11 19:23 GMT

பணகுடி:

பணகுடியை அடுத்த தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் கண்ணன். விவசாயி. இவருடைய மனைவி வள்ளியம்மாள் (வயது 55). இவர் அந்த பகுதியில் உள்ள தோட்டத்துக்கு சென்று, கால்நடைகளுக்கு தீவனம் சேரித்து விட்டு கூழக்கடை பஜார் வழியாக நேற்று இரவு 7 மணியளவில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், அவரது கழுத்தில் கிடந்த 8 பவுன் சங்கிலியை பறித்தனர். உடனே சுதாரித்துக் கொண்ட வள்ளியம்மாள் சங்கிலியை பிடித்துக் கொண்டார். இதனால் சங்கிலி அறுந்து 5 பவுன் கொள்ளையர்களின் கையிலும், 3 பவுன் வள்ளியம்மமாள் கையிலும் சிக்கிக் கொண்டது. கொள்ளையர்கள் 5 பவுன் நகையுடன் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்