பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு

மயிலம் முருகன் கோவிலில் பெண்ணிடம் 3 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-07-24 16:34 GMT

மயிலம், 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யூர் அடுத்த கீழ்மருவத்தூர் சக்திஸ்ரீ நகரை சேர்ந்தவர் கஜேந்திரன். இவருடைய மனைவி காஞ்சனாதேவி (வயது 60). இவர் தனது கணவருடன் நேற்று முன்தினம் ஆடி கிருத்திகையை முன்னிட்டு மயிலம் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார்.

அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு, மலைஅடிவாரத்தில் வழங்கப்பட்ட அன்னதானத்தை வாங்குவதற்காக காஞ்சனாதேவி நின்றார். அப்போது அங்கிருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர் ஒருவர் காஞசனா தேவி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து சென்றார்.

ரூ.1 லட்சம்

இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து மயிலம் போலீஸ் நிலையத்தில் காஞ்சனாதேவி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்று மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்