பெண்ணிடம் 2½ பவுன் நகை பறிப்பு
கருங்கல் அருேக முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் 2½ பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கருங்கல்:
கருங்கல் அருேக முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் 2½ பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
பெண்ணிடம் முகவரி கேட்பது...
கருங்கல் அருகே உள்ள நடுத்தேரி பகுதியை சேர்ந்தவர் அனீஷ் பிரபு. இவர் அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சுஜாதா (வயது 38).
இந்தநிலையில் நேற்று மதியம் சுஜாதா தனது கணவர் நடத்தி வரும் ஓட்டலுக்கு சென்றார். பின்னர் மீண்டும் திரும்பி வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் சுஜாதாவிடம் முகவரி கேட்டுள்ளனர்.
2½ பவுன் நகை பறிப்பு
அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமா்ந்திருந்த நபர் சுஜாதா கழுத்தில் கிடந்த 2½ பவுன் தங்க சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். ஆனால் அக்கம் பக்கத்தினர் அங்கு வருவதற்குள் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
இதுகுறித்து சுஜாதா கருங்கல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.