சின்னமனூரில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் போலீஸ் படுகாயம்

சின்னமனூரில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் போலீஸ் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-07-06 16:34 GMT

சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருபவர் தேவி (வயது 33). இவர் நேற்று காலை சின்னமனூர் சீப்பாலகோட்டை சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சின்னமனூரை சேர்ந்த 11 வயது சிறுவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக தேவி மீது மோதியது.

இதில் தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் தேவி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்