வீட்டின் மொட்டை மாடியில் பெண் மர்ம சாவு

வீட்டின் மொட்டை மாடியில் பெண் மர்மமான முறையில் இறந்துகிடந்தாா்

Update: 2023-05-29 20:39 GMT

அந்தியூரில் இருந்து புதுக்காடு பகுதிக்கு செல்லும் ரோட்டில் குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக அந்தியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், 'வீட்டின் மாடியில் இறந்து கிடந்தவர் அந்தியூர் சத்யா நகரை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மனைவி செல்வி (வயது 45),' என தெரியவந்தது. போலீசார் மேலும் நடத்திய விசாரணையில், 'செல்விக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. குடிபோதையில் அடிக்கடி வீட்டை விட்டு செல்பவர் மீண்டும் தானாக வீட்டுக்கு வந்துவிடுவது வழக்கம். ஆனால் கடந்த 27-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் குடிபோதையில் அந்தியூரில் இருந்து புதுக்காடு செல்லும் ரோட்டில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடிக்கு படி வழியாக ஏறி சென்று அங்கு கீழே விழுந்து இறந்து கிடந்ததும்,' தெரியவந்தது. எனினும் அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர்தான் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்