பெண்ணை கொன்று பானைக்குள் உடல் அடைப்பு

பாபநாசம் அருேக பெண்ணை கொன்று பானைக்குள் உடலை அடைத்து வைத்து சென்று மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2023-03-28 21:18 GMT

பாபநாசம்;

பாபநாசம் அருேக பெண்ணை கொன்று பானைக்குள் உடலை அடைத்து வைத்து சென்று மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருச்செந்தூருக்கு பயணம்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடை, கரை மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மனைவி செல்வமணி (வயது55). இவரது கணவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார்.இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் திருமணமான 3 மகள்கள் உள்ளனர்.ஒரு மகன் வெளிநாட்டிலும் மற்றொரு மகன் அதே பகுதியிலும் வசித்து வருகிறார். செல்வமணி கடந்த 24-ந் தேதி திருச்செந்தூர் செல்வதாக அருகில் உள்ளவரிடம் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் இவரது மகள் ராஜலட்சுமி, நேற்று மாலை செல்வமணி வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் கதவு பூட்டி இருந்தது. மேலும் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தார்.

பானையில் உடல் அடைப்பு

அப்போது செல்வமணி வீட்டில் இருந்த பித்தளை பானையில் தலை கீழாக அழுகிய நிலையில் நிர்வாணமாக பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த பாபநாசம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று செல்வமணி உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்வமணியை கொலை செய்து உடலை பானைக்குள் அடைத்து வைத்து அதன் மேல் ஒரு பாத்திரத்தை தலைகீழாக கவிழ்த்து வைத்து இருந்தது ெதரியவந்தது.மேலும் சம்பவ இடத்தில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி ஆகியோர் வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்துகொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்