அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் யாதவர் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 40), விவசாயி. இவரது மனைவி அமலா (33). இவர்களுக்கு வசுதாராணி (7) என்ற மகளும், பிரகதீஸ்வரன் (5) என்ற மகனும் உள்ளனர். இந்தநிலையில் உடையார்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நடந்த கூட்டத்தில் அமலா தனது குழந்தைகளுடன் கலந்து கொண்டார். அதன்பின்னர் அவர்கள் 3 பேரும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதுகுறித்து நடராஜன் அளித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அமலா மற்றும் குழந்தைகளை வலைவீசி தேடி வருகின்றனர்.