கரூர் கோயம்பள்ளி அருகே உள்ள செல்வி பாளையத்தை சேர்ந்தவர் ஜோதிமணி (வயது 39). கல்யாண புரோக்கர். இவருக்கும், ராமசாமி என்பவருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் ஜோதிமணி திடீரென மாயமானார். இதையடுத்து உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஜோதிமணியின் உறவினர் நர்மதா கொடுத்த புகாரின்பேரில் வாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரூபி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.