முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் அருகே உள்ள சின்ன ஆனையூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி மனைவி சித்திரைச் செல்வி(வயது 37). இவர் தனது குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பள்ளியில் இறங்கி விட்டு சின்ன ஆனையூருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது வழியில் நிலை தடுமாறி பள்ளத்தில் இருசக்கர வாகனத்தோடு கவிழ்ந்தார். இதில் சித்திரைச் செல்விக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இத்தகவல் அறிந்த பேரையூர் போலீசார் விரைந்து சென்று சித்திரைச் செல்வி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பேரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.