பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள ஒகளூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ் என்பவர் மனைவி செல்லம்மாள். கட்டிட தொழிலாளியான இவர், ஒகளூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது அந்த வழியாக மணவழகன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதி செல்லம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.