வேப்பூர் அருகே கார் மோதி பெண் பலி

வேப்பூர் அருகே கார் மோதி பெண் பலி படுகாயம் அடைந்த கணவருக்கு தீவிர சிகிச்சை

Update: 2022-07-11 17:18 GMT

ராமநத்தம்

வேப்பூர் அருகே உள்ள ஆலம்பாடியைச் சேர்ந்தவர் முருகன் மகன் பழனிவேல் (39). சம்பவத்தன்று இவர் அவரது மனைவி சுகன்யா(28) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சுகன்யாவின் தாய் வீடான கழுதூர் சென்று விட்டு மீண்டும் ஆலம்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தனர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாசார் கைக்காட்டி அருகே வந்தபோது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் பழனிவேல் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கணவன், மனைவி இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுகன்யா பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் பழனிவேல் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்