கார் மோதி பெண் பலி

கார் மோதி பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-03-11 18:49 GMT

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள குப்பமேட்டுப்பட்டியை ேசர்ந்த செல்வம் மனைவி சிலும்பாயி (வயது 50). இவருக்கு நேற்று முன்தினம் காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் சிலும்பாயியை அவரது மருமகன் கெட்டிசனம்பட்டியை சேர்ந்த பரமசிவம் என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு தோகைமலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார்.

பின்னர் சிகிச்சை முடிந்து மீண்டும் ஊருக்கு 2 பேரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது கெட்டிசனம்பட்டி பிரிவு ரோடு அருகே மோட்டார் சைக்கிளில் திரும்பியபோது, அந்த வழியாக வந்த ஒரு கார் பரமசிவம் மற்றும் சிலும்பாயி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த பரமசிவத்தை கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், சிலும்பாயியை திருச்சி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சிலும்பாயி பரிதாபமாக இறந்தார்.இதையடுத்து தோகைமலை போலீசார் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் கடலூர் மாவட்டம் புவனகிரி சேத்தியாதோப்பு மின்நகரை சேர்ந்த முகமது (29) என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்