கார்கள் மோதி பெண் பலி

அருப்புக்கோட்டை அருகே கார்கள் மோதிய விபத்தில் பெண் பலியானார். கணவர் உயிர்தப்பினார்.

Update: 2023-07-05 20:19 GMT

அருப்புக்கோட்டை,


அருப்புக்கோட்டை அருகே கார்கள் மோதிய விபத்தில் பெண் பலியானார். கணவர் உயிர்தப்பினார்.

காா்கள் மோதல்

அருப்புக்கோட்டை ஜெயா நகரை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி உமா மகேஸ்வரி (வயது 45). இவர்கள் இருவரும் காரில் சொந்த வேலையாக மதுரைக்கு சென்று விட்டு மீண்டும் அருப்புக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

பாளையம்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டு இருந்த போது எதிர்பாராதவிதமாக முன்னாள் சென்ற கார் மீது சங்கர் சென்ற கார் மோதியதாக கூறப்படுகிறது.

பெண் பலி

இதில் காரின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது. காரின் முன்னாள் அமர்ந்திருந்த உமாமகேஸ்வரி பலத்த காயமடைந்தார்.

இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய உமா மகேஸ்வரி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக சங்கர் உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்