லோடு ஆட்டோ மோதி பெண் பலி; 3 பேர் காயம்
ராதாபுரம் அருகே லோடு ஆட்டோ மோதிய விபத்தில் பெண் பலியானார். மேலும் 3 பெண்கள் காயம் அடைந்தனர்.
ராதாபுரம்:
ராதாபுரம் அருகே லோடு ஆட்டோ மோதிய விபத்தில் பெண் பலியானார். மேலும் 3 பெண்கள் காயம் அடைந்தனர்.
பெண்கள்
ராதாபுரம் அருகே சீலாத்திகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சுடலை மனைவி பிரேமா (வயது 47). இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த கல்யாணி (45), காளிஸ்வரி (25), ஜோதி (35) ஆகியோருடன் தனது வீட்டின் முன்பு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது லோடு ஆட்டோ ஒன்று அந்த பகுதியில் உள்ள திருமண வீட்டில் சீர்வரிைச பொருட்களை இறக்கி வைத்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தது.
லோடு ஆட்டோ மோதியது
அப்போது எதிர்பாராதவிதமாக அந்த லோடு ஆட்டோ, அங்கு பேசிக் கொண்டிருந்த பிரேமா உள்ளிட்ட 4 பேர் மீதும் மோதியது. இதில் பிரேமா பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கல்யாணி, காளிஸ்வரி, ஜோதி ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ராதாபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்னர் காளிஸ்வரி மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டார்.
சாலை மறியல்
இந்த நிலையில் விபத்ைத ஏற்படுத்திய லோடு ஆட்டோ டிரைவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, பிரேமா மற்றும் காயம் அடைந்தவர்களின் உறவினர்கள் சீலாத்திகுளத்தில் நேற்று காலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் ராதாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லோடு ஆட்ேடா டிரைவரான ராதாபுரம் அருகே மகேந்திரபுரத்தை சேர்ந்த குமாரை கைது செய்தனர். லோடு ஆட்டோ மோதிய விபத்தில் பெண் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.