கயிற்றால் கழுத்தை இறுக்கி பெண் கொலை

கலசபாக்கம் அருகே குடும்ப தகராறில் மனைவியை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்த அரசு பள்ளி ஊழியர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-11 16:31 GMT

கலசபாக்கம் அருகே குடும்ப தகராறில் மனைவியை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்த அரசு பள்ளி ஊழியர் கைது செய்யப்பட்டார்.

குடும்ப தகராறு

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா கடலாடி சாவடி தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 52), போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிளர்க்காக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி (50). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் ஒரு மகனுக்கும், மகளுக்கும் திருமணமாகி உள்ளன. ஒரு மகன் மனநிலை சரியில்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் முருகன் கடலாடி கிராமத்திலேயே தனியாக வீடு வாடகைக்கு எடுத்து மனைவி மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட மகனுடன் கடந்த 2 மாதங்களாக வசித்து வந்தார். இந்த நிலையில் முருகன் மகனுடன் சொந்த வீட்டில் சேர்ந்து வசிப்பதற்காக மனைவி ஜெயந்தியை அழைத்ததாக தெரிகிறது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாகவும், இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை

அதிகாலையில் முருகனுக்கும், ஜெயந்திக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன், ஜெயந்தியை நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சரண் அடைந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடலாடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஜெயந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து சரணடைந்த முருகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்