பாம்பு கடித்து பெண் சாவு
கீழ்பென்னாத்தூர் அருகே பாம்பு கடித்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
கீழ்பென்னாத்தூர்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள செவரப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி உண்ணாமலை (வயது 43). இவரை பாம்பு கடித்துள்ளது.
இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக மேக்களூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உபயதுல்லாகான் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.