மின்னல் தாக்கி பெண் பலி; 5 பேர் படுகாயம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மின்னல் தாக்கி பெண் பலியானார். 5 பேர் படுகாயம் அடைந்தனா்.

Update: 2023-04-25 19:45 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மின்னல் தாக்கி பெண் பலியானார். 5 பேர் படுகாயம் அடைந்தனா்.

பலத்த மழை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த மின்னலுடன் மழை பெய்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிள்ளையார் நத்தம் கிராமத்தில் போஸ்குமார் (வயது 35) என்பவர் பசுமாட்டில் இருந்து பால் கறந்து கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் பசுமாடு இறந்தது. போஸ்குமார் படுகாயம் அடைந்தார்.

பெண் பலி

அதேசமயத்தில் வயலில் வேலையை முடித்து விட்டு பொன்னுத்தாய் (50), சங்கீதா (23), சமுத்திரக்கனி (15), கிருஷ்ணவேணி (19) முத்துமாரி (37) ஆகியோர் வீடு திரும்பி கொண்டிருந்தனர். மின்னல் தாக்கியதில் அவர்கள் 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.

உடனே அவர்களை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பொன்னுத்தாய் பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்