மின்சாரம் தாக்கி பெண் பலி

நெல்லை அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.

Update: 2022-07-01 19:09 GMT

நெல்லை அருகே உள்ள செங்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மகேஷ்வரன். இவருடைய மனைவி வேலம்மாள் (வயது 39). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்