மின்சாரம் தாக்கி பெண் பலி

மின்சாரம் தாக்கி பெண் பலி

Update: 2023-09-02 18:45 GMT

வேளாங்கண்ணி அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.

மின்சாரம் தாக்கியது

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரம் ஊராட்சி நடுத்தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவரது மனைவி உமாபதி(வயது 48).

இவர் புதிதாக கட்டப்பட்டு வரும் தனது வீட்டில் நேற்று மின்விசிறியை போடுவதற்கு சுவிட்ச்சை போட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியதில் உமாபதி தூக்கி வீசப்பட்டு மயங்கினார்.

பரிதாப சாவு

இதனை பார்த்த அக்கம், பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உமாபதி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்