மின்சார ரெயிலில் அடிபட்டு பெண் பலி: யார் அவர்? போலீசார் விசாரணை
தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் மின்சார ரெயிலில் அடிபட்டு பலியானார். பெண்ணின் உடலை கைப்பற்றி போலீசார் யார் அவர்? என விசாரணை நடத்தி வருகிறது.
சென்னை சேத்துப்பட்டு-நுங்கம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற பெண், மின்சார ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார். ஆனால் அவர்?, எந்த ஊரைச் சேந்தவர்? என்பது தெரியவில்லை. எழும்பூர் ரெயில்வே போலீசார் பலியான பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான பெண் யார்? என விசாரித்து வருகின்றனர்.