திருத்தங்கலில் மின்சாரம் தாக்கி பெண் பலி
மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.
சிவகாசி,
திருத்தங்கல் கண்ணகி காலனியை சேர்ந்தவர் சபீர்அகமது மனைவி மன்சூராபேகம் (வயது 48). இவர் இட்லி மாவு தயார் செய்து விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று தனது வீட்டில் கிரைண்டரில் மாவு அரைத்த போது எதிர்பாராமல் மின்சாரம் தாக்கி மயங்கி கிடந்துள்ளார். அவரை மீட்ட குடும்பத்தினர் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பணியில் இருந்த டாக்டர், மன்சூராபேகத்தை பரிசோதித்து பார்த்து விட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மன்சூராபேகத்தின் மகன் அஜ்மீர்காஜா திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.