பெண் கடத்தலா? போலீசார் விசாரணை

பெண் கடத்தலா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-07-28 18:27 GMT

கீரனூர்:

கீரனூர் அருகே வாலியம்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 36). இவரது மனைவி மகேஸ்வரி (20). சம்பவத்தன்று குடும்பத்தினர் அனைவரும், ஸ்ரீரங்கத்திற்கு சென்று விட்டனர். வீட்டில் மகேஸ்வரி மட்டும் இருந்தார். இந்நிலையில் வீட்டிற்கு திரும்பி வந்த குடும்பத்தினர், வீட்டில் மகேஸ்வரி இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து முத்துக்குமார் கீரனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் மகேஸ்வரியை யாரும் கடத்தி சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்