விபசாரத்தில் ஈடுபட்ட பெண் கைது

விருத்தாசலத்தில் விபசாரத்தில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-07 18:45 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் செல்வராஜ் நகர் பகுதியில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் வீட்டில் விபசாரம் நடப்பது தெரிய வந்தது. இதையடுத்து விபசாரத்தில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்