மோட்டார் சைக்கிள் மோதி பெண் படுகாயம்

திருச்சுழி அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-09-03 18:43 GMT

திருச்சுழி,

திருச்சுழி அருகே கல்லூரணியை சேர்ந்தவர் ரவீந்திரபாண்டியன். இவருடைய மனைவி சித்ராதேவி (வயது 50).இவர் கல்லூரணி பஜாரில் மளிகை பொருட்களை வாங்கிவிட்டு நின்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியே நார்த்தம்பட்டியை சேர்ந்த கணபதி மகன் பிரகாசம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், சித்ராதேவி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து ம.ரெட்டியபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்