வெடி வெடித்து பெண் படுகாயம்
சாலை விரிவாக்க பணிக்காக வைக்கப்பட்டிருந்த வெடி வெடித்து பெண் படுகாயம் அடைந்தார்.
மணலூர்பேட்டை,
திருக்கோவிலூர் அருகே குச்சிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி அஞ்சலை (வயது 32). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் வேலைக்கு சென்றார். அப்போது அந்த பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று கொண்டு இருந்தது. இதில் சாலையில் இருந்த பெரிய கல்லை வெடி வைத்து தகர்த்தனர். அப்போது கற்கள் சிதறி எதிர்பாராதவிதமாக அஞ்சலையின் காலில் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் வெடி வைக்கும்போது அஜாக்கிரதையாக செயல்பட்டதாக கூறி அரகண்டநல்லூர் அருகே கொல்லூர் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் (35) என்பவர் மீது மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.