திருச்செங்கோடு அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருச்செங்கோடு அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-20 18:45 GMT

திருச்செங்கோடு:

திருச்செங்கோடு அருகே கோழிக்கால் நத்தம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல், கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி கஸ்தூரி (வயது 29). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது கஸ்தூரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் கிடைத்ததும், திருச்செங்கோடு ரூரல் போலீசார் அங்கு விரைந்து சென்று கஸ்தூரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், கஸ்தூரிக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாததால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்