பெண் தூக்குப்போட்டு சாவு

விருத்தாசலம் அருகே பெண் தூக்குப்போட்டு பரிதாபமாக இறந்தார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக தம்பதி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-01-14 18:45 GMT

ஆலடி, 

விருத்தாசலம் அருகே உள்ள மணக்கொள்ளையை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 39). இவரது மனைவி கனிமொழி (35). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கனிமொழி, அதே பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரிடம் பேசி வந்துள்ளார்.

சம்பவத்தன்று திருநாவுக்கரசுவின் மனைவி துர்கா தேவி, தாய் இளங்கோவை ஆகியோர் கனிமொழியின் வீட்டுக்கு சென்று, ஏன் திருநாவுக்கரசுடன் பேசுகிறாய்? என்று கேட்டு அவரை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதில் மனமுடைந்த கனிமொழி வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ஏழுமலை, ஆலடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், தனது மனைவியை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

அதன் அடிப்படையில் கனிமொழியை தற்கொலைக்கு தூண்டியதாக திருநாவுக்கரசு, துர்கா தேவி, இளங்கோவை ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்