கிணற்றில் தவறிவிழுந்து பெண் சாவு

நாலாட்டின்புத்தூர் அருகே கிணற்றில் தவறிவிழுந்து பெண் பரிதாபமாக இறந்து போனார்.

Update: 2023-02-22 18:45 GMT

நாலாட்டின்புத்தூர்:

நாலாட்டின்புத்தூர் அருகிலுள்ள பீக்கிலிபட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவர் தென்காசியில் மின்சார வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது 40). இவர்களுக்கு குழந்தைகளு இல்லை. ராஜேஸ்வரி நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் கணவரிடம் போனில் பேசியுள்ளார். பின்னர் தோட்டத்தில் உள்ள ஆடுகளை மேய்த்து விட்டு அருகில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். அங்கு எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் அவர் தவறி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நாலாட்டின்புத்தூர் போலீசார் ராஜேஸ்வரியின் உடலை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து நாலாட்டின்புத்தூ போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

மேலும் செய்திகள்