கிணற்றில் தவறி விழுந்து பெண் பலி

செங்கம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் பலியானாா்.

Update: 2022-08-15 18:42 GMT

செங்கம்

செங்கம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் பலியானாா்.

செங்கம் அருகே உள்ள படிஅக்ரகாரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. விவசாயி. இவரது மனைவி தீபா (வயது 40) அந்த பகுதியில் உள்ள விவசாய கிணற்றின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார். இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் விழுந்த தீபாவின் சடலத்தை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இது தொடர்பாக பாய்ச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்