பாம்பு கடித்து பெண் சாவு

கொள்ளிடம் அருகே பாம்பு கடித்து பெண் சாவு

Update: 2022-09-06 18:29 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே உள்ள குன்னம் ஊராட்சி உப்பங்காடு கிராமத்தைச் சேர்ந்த குமார் மனைவி ரேவதி (வயது32). இவர் அங்குள்ள ஒருவரின் வயலில் நேற்று முன்தினம் வேலை செய்து கொண்டிருந்தபோது அவரை பாம்பு கடித்தது. இதனால் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரேவதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்