மின்சாரம் தாக்கி பெண் சாவு
கூடங்குளத்தில் மின்சாரம் தாக்கி பெண் இறந்தார்.
கூடங்குளம்:
கூடங்குளம் வடக்கு காமராஜர் தெருவை சேர்ந்த சந்தன கோனார் என்பவருடைய மனைவி நல்லம்மாள் (வயது 52). இவர் தனது வீட்டில் உள்ள மின்சார பெட்டியின் அருகில் வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பியை தொட்ட போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் கூடங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் வினோத் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.