சேலையில் தீப்பற்றி பெண் சாவு
சேலையில் தீப்பற்றிய பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
தஞ்சை மாவட்டம், பூதலூர் அருகே உள்ள புதுப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் இளங்கோவன். விவசாயி. இவரது மனைவி கார்த்திகா (வயது 35). இவர் சம்பவத்தன்று வீட்டில் மண்எண்ணெய் ஊற்றிஅடுப்பு பற்றவைத்த போது எதிர்பாராத விதமாக சேலையில் தீப்பற்றியது. இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர், தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி கார்த்திகா உயிரிழந்தார். இதுகுறித்து இளங்கோவன் கொடுத்த புகாரின்பேரில் பூதலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.