குளவி கொட்டியதில் பெண் சாவு

ஆம்பூர் அருகே மேல்பட்டியில் குளவி கொட்டி பெண் மயங்கி விழுந்து இறந்தார்.

Update: 2022-07-08 17:08 GMT

ஆம்பூர், ஜூலை.9-

ஆம்பூர் அருகே மேல்பட்டியில் குளவி கொட்டி பெண் மயங்கி விழுந்து இறந்தார்.

ஆம்பூரை அடுத்த மேல்பட்டி அருகே உள்ள சின்ன தோட்டாளம் கிராமத்தை சேர்ந்த மணி என்பவர் மனைவி வசந்த பாப்பு (வயது 62). நேற்று காலை 11 மணியளவில் தனது வீட்டில் தென்னை ஓலை முடைந்து கொண்டிருந்தார்.

அப்போது தென்னை ஓலையில் கூடு கட்டியிருந்த குளவி ஒன்று திடீரென வசந்த பாப்புவை கொட்டியது. மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மாதனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி வசந்த பாப்பு இறந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த மேல் பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்