ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் பலி

ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் பலியானார்.

Update: 2022-09-13 22:38 GMT

ஓமலூர்:

ஓமலூர் அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மனைவி சோனியா (வயது 24). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் சோனியா மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான சோனியாவுக்கு கடந்த 8-ந் தேதி ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து கடந்த 12-ந் தேதி அவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை சோனியா உடல்நிலை பாதிக்கப்பட்டு, மயக்க நிலைக்கு சென்றார். இதனால் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சோனியா பரிதாபமாக இறந்தார். அவருக்கு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அவர் இறந்ததால், அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்