ரெயிலில் அடிபட்டு பெண் பலி

திண்டுக்கல் அருகே அடிபட்டு 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பலியானார்.

Update: 2023-05-12 19:00 GMT

திண்டுக்கல்லை அடுத்த ஏ.வெள்ளோடு அருகே ரெயில் தண்டவாள பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல் சிதறிய நிலையில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், தனிப்பிரிவு ஏட்டு ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அதில், ரெயிலில் அடிபட்டு அந்த பெண் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அப்பெண்ணின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பெண்ணின் முகம் சிதைந்த நிலையில் இருப்பதால் அவர் யார்? என்பது தெரியவில்லை. மேலும் இதுகுறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்